கோவையில் காவல் வாகனங்கள் பொது ஏலம்

published 2 years ago

கோவையில் காவல் வாகனங்கள் பொது ஏலம்

கோவை: கோவை மாவட்டத்தில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகின்றன.

இதுகுறித்து கோவை மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


கோவை மாவட்ட காவல்துறையினரால் மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்டு அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்ட 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 28 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 31 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு கோவை அவிநாசி சாலையிலுள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும்.

ஏலத்தில் விடப்படும் வாகனங்கள் பொள்ளாச்சி வெங்கடேசா காலணியில் உள்ள முதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம், கோவில்பாளையம் தேவம்பாளையம் பாலாஜி நகரிலுள்ள மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம், மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி, ஆனைமலை, ஆழியார் மற்றும் கோமங்கலம் காவல் நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏலம் எடுக்க விரும்புவோர் 22ம் தேதி மாலை 5 மணி வரை அந்தந்த மதுவிலக்கு அமல்பிரிவுகள் மற்றும் காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம்.

வாகனங்கள் ஏலம் எடுத்தவுடன் முழுத் தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (GST) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு போலீசார் அறிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe