அன்னூர் அருகே பட்டப்பகலில் கோவிலுக்குள் புகுந்து உண்டியல் திருட்டு

published 2 years ago

அன்னூர் அருகே பட்டப்பகலில் கோவிலுக்குள் புகுந்து உண்டியல் திருட்டு


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த பொகலூர் அருகே சொக்கட்டாம்பள்ளி   கிராமத்தில்  மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு பணம் மற்றும் நகைகள் கணக்கிடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி வழக்கம் போல கோவிலில் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை  பூட்டி சென்றார். மறுநாள் மதியம் கோவிலை மீண்டும் திறக்க பூசாரி வந்தார்.

அப்போது உள்ளே சென்று பார்த்த போது  கோவிலில் இருந்த உண்டியல் திருட்டு போயிருந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவிலுக்கு வெளியே வந்து பார்த்தார்.
அங்கு உடைக்கப்பட்ட நிலையில் உண்டியல் கிடந்தது. இதுகுறித்து பூசாரி சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கோவிலுக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி  காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வாக்குப்பதிவு செய்து கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து கொள்ளையடித்த திருடர்களை தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில்  கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து திருட்டு போன சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe