அமெரிக்கா செல்லும் கோவையின் இளம் அரசியல்வாதி இராமச்சந்திரன்

published 2 years ago

அமெரிக்கா செல்லும் கோவையின் இளம் அரசியல்வாதி இராமச்சந்திரன்

கோவை: கோவையைச் சேர்ந்த இளம் அரசியல்வாதி இராமச்சந்திரன் தூதரக அழைப்பின் பேரில் 3 வாரப் பயிற்சி பெற நாளை அமெரிக்கா செல்கிறார்.

அ.இஅதிமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவின் கோவை மண்டலச் செயலாளராக பணியாற்றி வரும் சிங்கை ஜி. இராமச்சந்திரன் அவர்களை, அமெரிக்க அரசாங்கம் 82 வருடப் பழமையான International Visitor Leadership Program on Young Politicians: The Future of Indian Democracy (IVLP) எனப்படும் மூன்று வாரக் கால பயிற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இப்பயிற்சியில் அமெரிக்க நாட்டின் அரசியல், அரசியல் அமைப்பு, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, அரசாங்க வெளிப்படைத்தன்மை, ஆட்சிமுறை, மக்களாட்சி தத்துவம் உள்ளிட்ட தலைமைப் பண்பிற்குத் தேவையான அனைத்தும் கற்றுத்தரப்படும்.

International Visitor Leadership Program (IVLP), அதாவது சர்வதேச வருகையாளர்களின் தலைமைத்துவ பண்பை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சி என்பது அமெரிக்க அரசின் Department of State's Bureau of Educational and Cultural Affairs பணிக்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு தொழில்முறை பரிமாற்றத் திட்டமாகும்.

தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் இளம் தலைவர்களுக்குச் சர்வதேச அளவிலான அரசியல், தொழில், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வாழ்வின் செழுமையையும் பன்முகத்தன்மையையும் மேம்படுத்துவதே IVLP-யின் முக்கிய நோக்கமாகும்.

இந்த நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வரும் 5,000 தலைவர்கள் உலகம் முழுவதிலுமிருந்து அழைக்கப்படுகிறார்கள். மூன்று வார காலம் நடைபெறும் இப்பயிற்சிக்குத்  தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் அமெரிக்கத் தூதரகத்தால் மட்டுமே பரிந்துரைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe