டாட்டா குழுமத்தைச் சேர்ந்த டைட்டன் நிறுவனத்தின் 4- வது புதிய விற்பனை பிரிவான 'தநைரா' அன்னூரில் துவக்கம்

published 2 years ago

டாட்டா குழுமத்தைச் சேர்ந்த டைட்டன் நிறுவனத்தின் 4- வது புதிய விற்பனை பிரிவான 'தநைரா' அன்னூரில் துவக்கம்

கோவை: டாட்டா குழுமத்தைச் சேர்ந்த டைட்டன் நிறுவனத்தின் மேலும் ஒரு புதிய விற்பனை பிரிவான தநைரா, கோவையைச் சேர்ந்த மகிஷ் சில்க்ஸ் அண்ட் ஏஜென்சி உடன் சேர்ந்து சேலை உற்பத்தி செய்வதில் ஒரு முதல் முயற்சியாக வீவர்ஷாலா நெசவுச்சாலையை கோவையில் தொடங்கியுள்ளது.

கோயம்புத்தூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நெசவு சாலையில் தென் பிராந்திய பட்டு நெய்யும் நுட்பங்களை நவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் எதிர்கால தலைமுறைகளுக்கு கையால் நெய்யும் பாரம்பரிய முறைகளைப் பாதுகாத்து வழங்குவதோடு தென்பிராந்திய பட்டுச் சேலைகள் தயாரிப்பில் சிறந்து விளங்குவதற்காக நெசவாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது.

கோவை சிறுமுகை-அன்னூர் சாலையில் அமைந்துள்ள தனது கூட்டு நிறுவனமான மகிஷ் சில்க்ஸ் அண்ட் ஏஜென்சிஸ் உடன் இணைந்து செயலாற்றுகிறது. டைட்டன் கம்பெனி நிர்வாக இயக்குநரான சி. கே. வெங்கட்ராமன், தநைரா-வின் தலைமை நிர்வாக அலுவலர் அம்புஜ் நாராயணன், மகிஸ் சில்க்ஸ் அண்ட் ஏஜென்சியின் உரிமையாளர் ஆர் மல்லிகா ஜுனன் ஆகியோர் சிறப்புமிக்க நினைவு துவக்கி வைத்துள்ளனர்.

புதிதாகத் தொடங்கப்பட்ட வீவர் ஷாலா-வில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் பாரம்பரிய நெசவாளர் சமூகத்தினர் அமர்வதற்காகவே சவுரியமான இருக்கையுடன் கூடிய நவீன நெசவுத்தரைகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது பற்றி தநைராவின் தலைமை நிர்வாக அலுவலர் அம்புஜ் நாராயணன் பேசுகையில் கூறியதாவது:- 
"கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டுள்ள வீவர் ஷாலா மூலமாக தென்பிராந்திய பட்டுச் சேலைகளின் செம்மையான பாரம்பரியத்தை வளர்ப்பதும், தரமான பட்டுச் சேலைகளை தயாரிப்பதுமே எங்களது நோக்கமாகும். இந்த முயற்சியானது நெசவாளர்களின் வாழ்க்கையைச் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நகரச் செய்யும். அதோடு அனைவராலும் விரும்பப்படும் கையால் நெய்யப்பட்ட தென்னிந்தியப் பட்டுச் சேலைகளுக்குப் புத்துயிர் தரும்." எனத் தெரிவித்தார்.

2017-இல் தொடங்கப்பட்ட தநைரா தற்போது 19 நகரங்களில் 38 விற்பனையகங்கள் என்று ஒரு பலமான நெட்வொர்க் மூலமாக மிகச்சிறந்த பணியாளர்களைக் கொண்டு தரமான சேவையைத் தருகிறது. தனித்துவமான பட்டு ரகங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. தனக்கென்ற தனி இடத்தை வலுப்படுத்தும் பொருட்டு இந்தியாவிலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் விற்பனையகங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe