கோவைக்கு ஜனாதிபதி வருகை கோவை மாவட்டத்தில் 6000 போலீசார் பாதுகாப்பு

published 2 years ago

கோவைக்கு ஜனாதிபதி வருகை கோவை மாவட்டத்தில் 6000 போலீசார் பாதுகாப்பு

கோவை: கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகிற 18-ந் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மஹா சிவராத்திரி விழா நடக்க இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக, ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.


ஜனாதிபதி கோவை வருகையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் காணொலி மூலம்  கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.இதில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இவர்களுடன், துறை ரீதியாக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக, தலைமை செயலர் இறையன்பு ஆலோனை நடத்தினார். அப்போது அவர் ஜனாதிபதிக்குரிய அனைத்து வித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாநகர போலீசார் மேற்கொள்ள வேண்டும்.
 

வெடிகுண்டு செயலிழப்பு கருவிகள் தயாராக வைத்திருக்க வேண்டும். விழா நடக்கும் இடத்தில், கவர்னர்கள், முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு விதிமுறைக்கு உட்பட்டு இருக்கை வசதி செய்து கொடுக்கும் பொறுப்பு, டி.ஆர்.ஓ., மற்றும் ஆர். டி.ஓ.,வுக்கு கொடுக்க வேண்டும்.

சிறப்பு மருத்துவ நிபுணர்களுடன் மருத்துவ குழு இருக்க வேண்டும். மின் வினியோகத்தில் எவ்வித இடையூறும் இருக்கக் கூடாது. ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாலைகளை சீரமைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையடுத்து ஜனாதிபதி வருகையை  அடுத்து, கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.மாவட்டத்தில், 5,000 போலீசாரும், மாநகரில், 1,000க்கும் மேற்பட்ட போலீசாரும் என 6000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அண்டை மாவட்டங்களில் இருந்து போலீசாரை வரவழைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்குவோர் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe