இணையவழி அட்மிஷன் 3ம் தேதி முதல் துவக்கம்.. பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு

published 1 year ago

இணையவழி அட்மிஷன் 3ம் தேதி முதல் துவக்கம்.. பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு

கோவை:பாரதியார் பல்கலை தொலைதுார கல்வி முறையில் இணையவழியில் இளநிலை, முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது. இதற்கான சேர்க்கை பதிவுகள், வரும் 3ம் தேதி முதல் துவங்கவுள்ளன.

இணையவழி கல்வி பிரிவின் கீழ், பி.ஏ.ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., முதுநிலை பிரிவுகளின் கீழ் எம்.ஏ., தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், எம்.ஏ., பொருளாதாரம், எம்.காம்., எம்.காம்., நிதி மற்றும் கணக்கு பதிவியல், எம்.ஏ., தொழில்நெறி வழிகாட்டுதல் ஆகிய படிப்புகளின் கீழ், மாணவர் சேர்க்கை நடக்கிறது.


இணையவழி படிப்புக்கு விண்ணப்ப பதிவு, சேர்க்கை, கட்டணம் செலுத்துதல், தேர்வு, தேர்வு முடிவு அறிவிப்பு, சான்றிதழ் வழங்குதல் என அனைத்தும், இணையவழியில் மட்டுமே நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு, https://b-u.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மாணவர்கள் விண்ணப்ப பதிவுகளை, 3ம் தேதி முதல் 31ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe