பீளமேட்டில் குடிநீருக்க்கு பதிலாக சாக்கடை நீர்.. மக்கள் அதிர்ச்சி

published 1 year ago

பீளமேட்டில் குடிநீருக்க்கு பதிலாக சாக்கடை நீர்..  மக்கள் அதிர்ச்சி

கோவை: பீளமேடு பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, குடிதிருக்கு பதிலாக சாக்கடைகழிவுநீர் மட்டுமே குழாய்களில் வருவதால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

மாநகராட்சியின் பழைய வார்டுகளில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தை, சூயஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. தற்போது வார்டுகளில் குடிநீர் இணைப்பு வழங்குவது, நீர் தேக்க தொட்டிகள் கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பீளமேடு, 26வது வார்டுக்கு உட்பட்ட முருகன் நகர் பகுதியில் 224 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடந்த, 24ம் தேதி முதல், குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதாக, அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:  சூயஸ் நிறுவனத்தினர் குடிநீர் இணைப்பு பணிகள் செய்துகொண்டிருந்த போது குழாயை உடைத்துவிட்டனர். சாக்கடையை ஒட்டி பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், சாக்கடை தண்ணீரே வருகிறது.

ஒரு வாரத்துக்கு மேலாகியும், இதுவரை தீர்வு காணப்படவில்லை. தண்ணீர் சப்ளை ஆனபோது, தொட்டிகளில் முழுவதும் சாக்கடை தேங்கியதால் துர்நாற்றம் வீசுகிறது வேறு வழியின்றி ஒவ்வொரு, வீட்டிற்கும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து, குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தோம்.

நேற்று முன்தினம் தண்ணீர் வருவதாக கூறினர். குடிநீர் குழாயை நிறந்தபோது மீண்டும் சாக்கடை தண்ணீர் தான் வந்தது மீண்டும் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. குடிநீரின்றி சிரமப்படும் நிலையில், இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe