துடியலூர் பகுதியில் கஞ்சா பறிமுதல்... ஒருவர் கைது

published 1 year ago

துடியலூர் பகுதியில் கஞ்சா  பறிமுதல்... ஒருவர் கைது

கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். 

நேற்று துடியலூர் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை  காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான கவுண்டம்பாளையம் (SKR நகர் பார்க்) பகுதிக்கு  விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சா வைத்திருந்த கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணி மகன் வினோத் குமார் (எ) வினோத் (30) என்ற  நபரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 1,500 கிலோ  கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் ரூ.65,000/- பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe