கோவை அருகே வீட்டின் கதவை உடைத்த காட்டு யானை

published 1 year ago

கோவை அருகே வீட்டின் கதவை உடைத்த காட்டு யானை

கோவை: கோவை தடாகம் பகுதியையொட்டி வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. அவ்வாறு வரும் யானைகள் விளைநிலங்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளன. 

பன்னிமடையை அடுத்த வரப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் வீடு ஒன்றும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இந்த தோட்டத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அந்த யானை தோட்டத்திற்குள் அங்கும், மிங்கும் சுற்றி திரிந்தது. பின்னர் வீட்டின் அருகே சென்ற காட்டு யானை வீட்டின் கதவை உடைத்தது. 

தொடர்ந்து உள்ளே நுழைந்த காட்டு யானை அங்கு வைக்கப்பட்டிருந்த மாட்டுத் தீவனங்களை உண்ண முயன்றது. ஆனால் யானையால் மேற்கொண்டு வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. இதனால் யானை அங்கு இருந்த பொருட்கள் அனைத்தையும் தேசப்படுத்தி விட்டு மீண்டும் வனத்தை நோக்கி சென்று விட்டது. 

இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவாகியுள்ளது. அக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், காட்டுயானைகள் எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் நுழையக்கூடும் என்பதால், வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe