பொள்ளாச்சி வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

published 1 year ago

பொள்ளாச்சி வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

கோவை: பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து அவ்வப்போது ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். 

அதன் அடிப்படையில் பொள்ளாச்சி நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 78 லட்சம் மதிப்பீட்டில் 48 கடைகள் கொண்ட மீன் மார்க்கெட் கட்டுமான பணிகள், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நகராட்சி ஆண்கள், மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி, ரூ.148 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை கட்டுமான பணிகள், பொள்ளாச்சி கோயம்புத்தூர் சாலை சி.டி.சி மேடு, அருகே ரூ. 7 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை ஆட்சியர் கிராந்தி குமார்பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe