சூலூரில் ஹெலிகாப்டர் மூலம் குளத்தில் தண்ணீர் எடுத்து தீயணைப்பு ஒத்திகை

published 1 year ago

சூலூரில் ஹெலிகாப்டர் மூலம் குளத்தில் தண்ணீர் எடுத்து தீயணைப்பு ஒத்திகை

கோவை: கோவை மாவட்டம் சூலூரில் இந்திய ராணுவ படைக்கு சொந்தமான விமானப்படை தளம் செயல்பட்டு வருகிறது. இங்கு விமானப்படைகளில் பயன்படுத்தப்படும் விமானங்கள் உருவாக்குவது, விமானப் பயிற்சி, விமானப்படை பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மாதம்தோறும் விமானப்படை விமானங்கள் மூலம் பேரிடர் கால ஒத்திகையானது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாததத்திற்கான பேரிடர் கால ஒத்திகை சூலூரில் உள்ள பெரிய குளத்தில் நடைபெற்றது. அதன்படி தீ விபத்து ஏற்படும் போது எப்படி ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைப்பது என்பது குறித்து தத்ரூபமாக விளக்கப்பட்டது.

சூலூர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் தீ விபத்தை கட்டுப்படுத்துவது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. அதன்படி சூலூர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் சூலூர் பெரிய குளத்திற்கு சென்றது. அங்கு வானில் வட்டமிட்டபிடியே ஹெலிகாப்டரில் இருந்து 2 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட ராட்சத கொள்கலனை கயிறு கட்டி கீழே இறக்கினர். 

பின்னர் அது கீழே வந்து குளத்தில் தண்ணீரை நிரப்பியதும் மீண்டும் மேலே எடுத்து செல்லப்பட்டு, விபத்து நடந்த இடத்தில் தண்ணீரை தெளித்து தீயை அணைப்பது போன்று தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. இந்த ஒத்திகை காட்சியை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் வியந்து பார்த்துச் சென்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe