நீலகிரி மலை ரயில் சேவை ரத்து!..

published 1 year ago

நீலகிரி மலை ரயில் சேவை ரத்து!..

கோவை: குன்னூரில் மலை ரயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் மேட்டுப்பாளையம் செல்லும் மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

நாள்தோறும் பிற்பகல் 3:30 மணி அளவில் மேட்டுப்பாளையம் செல்வதற்காக குன்னூர் ரயில் நிலையத்திலிருந்து  மலை ரயில் மேட்டுப்பாளையம் கிளம்பிச் செல்வது வழக்கம் இந்த நிலையில் ,நேற்று மேட்டுப்பாளையம் செல்ல மலை ரயில் புறப்பட்டபோது  மலை ரயிலின் கடைசி பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியது.

பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில் பெட்டியினை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது .ஒரு மணி 

நேரத்திற்கு மேலாக மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டு மேட்டுப்பாளையம் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது .

மலைரயிலில் பயணம் மேற்கொள்ள இருந்த 150க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் சிறப்புப் பேருந்து மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தண்டவாளத்தில் சக்கரங்கள் கீழே இறங்கியதால் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல ஆசையாக மலைரயிலில் பயணிக்க முன் பதிவு செய்து காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் சம்பவத்தால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe