வ.உ.சி. உயிரியல் பூங்கா விலங்குகள் விரைவில் இடமாற்றம்

published 1 year ago

வ.உ.சி. உயிரியல் பூங்கா விலங்குகள் விரைவில் இடமாற்றம்

கோவை: கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ள விலங்குகள் வண்டலூர், கிண்டி, அமராவதி உயிரியல் பூங்காங்களுக்கு விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.

கோவையின் அடையாளங்களில் ஒன்றாக மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த 1965-ம் ஆண்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டது.

 ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 532 விலங்கினங்கள் வரை உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நாள்தோறும் 300 முதல் 350 பேர் வார நாட்களிலும், 1500 முதல் 2000 பேர் வரை விடுமுறை நாட்களிலும் வந்து சென்றனர். 

இதனிடையே, பூங்கா மற்றும் விலங்கினங்களின் பராமரிப்பு விவகாரத்தில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாடு துறையின் கீழ் செயல்படும் ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையம் கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது.

இதனால், வ.உ.சி. உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது. மக்கள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. மக்களுக்கு இது மிகுந்த மன வேதனையை அளித்தது. மீண்டும் வ.உ.சி. உயிரியல் பூங்கா திறக்கப்பட வேண்டும் என கோவை மக்களின் கோரிக்கை விடுத்தனர். 

இதனை அடுத்து வ.உ.சி. உயிரியல் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் கூறுகையில்,‘‘வ.உ.சி. உயிரியல் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை வண்டலூர், கிண்டி, அமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வது குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்’’ என்றார்.

___

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe