கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டி கிரிக்கெட் ஸ்டம்பால் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கிய கும்பல்!..

published 1 year ago

கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டி கிரிக்கெட் ஸ்டம்பால் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கிய கும்பல்!..

கோவை: கோவையில் கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டி கிரிக்கெட் ஸ்டம்பால் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி வாலிபர் மீது தாக்குதல் நடத்தியதாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை போத்தனூர் ரோடு வெள்ளலூரை சேர்ந்தவர் ஸ்ரீதர்(34). இவருக்கும் மாச்சம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சிவக்குமார்(29), வெள்ளலூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கண்ணன்(36) ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது.

 கடந்த 2021ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் சாட்சி சொல்லக்கூடாது என சிவக்குமார், கண்ணன் ஆகியோர் ஸ்ரீதர் குடும்பத்தினரை அடிக்கடி மிரட்டி வந்தனர். இந்நிலையில், நேற்று ஸ்ரீதர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது வெள்ளலூர் மைதானம் அருகே சென்றபோது அங்கு கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிவக்குமார், கண்ணன் ஆகியோர் காரை நிறுத்தி தகராறு செய்தனர். 

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி கிரிக்கெட் ஸ்டம்பால் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். 

தடுக்க முயன்ற ஸ்ரீதரின் சகோதரை கிரிக்கெட் ஸ்டம்பால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இது குறித்து ஸ்ரீதர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சிவக்குமார், கண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

இதேபோல், சிவக்குமார் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதில், ஸ்ரீதர் உட்பட 3 பேர் என்னை உருட்டுக்கட்டையால் தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். 

அதன்பேரில், போலீசார் ஸ்ரீதர், ராமகிருஷ்ணன் மற்றும் மருதாச்சலம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

------------

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe