கோவையில் கோர விபத்து : கல்லூரி சுவர் இடிந்து 4 பேர் பரிதாப பலி.!

published 1 year ago

கோவையில் கோர விபத்து : கல்லூரி சுவர் இடிந்து 4 பேர் பரிதாப பலி.!

கோவை: கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் பகுதியில் தனியார் கல்லூரி வளாகம் செயல்பட்டு வருகிறது. 

இதனிடையே கல்லூரி வளாகத்தின் விடுதி அருகே அமைந்துள்ள பகுதியில் காம்பவுண்டு சுவர் ஒன்று உள்ளது இது கருங்கல்லால் ஆனது. இந்த சுவர் சுமார் 30 அடி நீளம் உள்ளது. உயரம் 5 அடி அளவில் உள்ளது. இந்த காம்பவுண்ட் சுவர் ஒட்டியே புதிய காம்பவுண்ட் சுவர் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

இதற்காக இந்த கருங்கலில் ஆன சுவரை ஒட்டி அஸ்திவாரத்திற்காக குழி தோண்டப்பட்டுள்ளது. அதற்கான கட்டுமான பணிகள்  நடைபெற்று வந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த 3 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 பேர்  பணிபுரிந்து வந்திருந்தனர்.  இதனிடையே நேற்று மாலை 5:30 மணி அளவில் காம்பவுண்டின் அஸ்திவாரம் வலுவிழந்து கருங்கல்கள்  இடிந்து  அனைத்தும் கீழே விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் ஐந்து பேரும் சிக்கினார்கள். இதில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில்.ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன் நேரில் சென்று  பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  கல்லூரியின் காம்பவுண்ட் சுவர்கள் வலுவாக இல்லை என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து பலமுறை அறிவுறுத்தினார்கள். அவர்கள் மாநகராட்சிக்கு எந்த ஒத்துழைப்பும் அளிக்கவில்லை.  கண்டிப்பாக நடவடிக்கையும் எடுக்கப்படும், என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe