கோவைக்கு 3வது பொறுப்பு அமைச்சர் நியமனம்..!

published 1 year ago

கோவைக்கு 3வது பொறுப்பு அமைச்சர்  நியமனம்..!

கோவை: கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமியை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்து தலைமை செயலாளர்  சிவ் தாஸ் மீனா அரசாணை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துதல், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணித்தல், இயற்கை சீற்றம், நோய் தொற்று மற்றும் அவசர கால பணிகளை  மேற்கொள்ள வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 அதன்படி தற்போது கோவை மாவட்டத்திற்கு, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர்களாக ஏற்கனவே ராமச்சந்திரன் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe