கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 5 இடங்களில் சுரங்கப்பாதை - அதிகாரிகள் தகவல்

published 2 years ago

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 5 இடங்களில் சுரங்கப்பாதை - அதிகாரிகள் தகவல்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/FePOfH8LTBKE40nzrfPpnD

கோவை : கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் சுரங்கபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது.

கோவை மாநகர் பகுதிகளான ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, கிராஸ்கட் ரோடு, காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையை கடக்க பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.

இதைத்தவிர்க்க, முக்கிய இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுரங்க பாதைகள் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள குளங்கள் மற்றும் பல்வேறு பணிகள் ரூ.1500 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்களின் வசதிக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் சுரங்கபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "கோவை டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் சுரங்கபாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவை மாநகர் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளுடன், சுரங்கபாதையும் அமைக்கப்படும். இதனால் போக்குவரத்து நெருக்கடி பெருமளவு குறையும்."என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe