மனைவியை பிரிந்து வாழ்ந்த நபருக்கு கத்திக்குத்து.. மனைவி மற்றும் நண்பர் கைது

published 1 year ago

மனைவியை பிரிந்து வாழ்ந்த நபருக்கு கத்திக்குத்து.. மனைவி மற்றும் நண்பர் கைது

கோவை: கோவையில் மனைவியை பிரிந்து வாழ்ந்த வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி மேட்டுக்கடையை சேர்ந்தவர் கார்த்திக்(31). இவர் கோவை வெள்ளலூர் கஞ்சிகோணாம்பாளையத்தில் தங்கியிருந்து தனியார் கம்பெனியில் வெல்டராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சங்ககிரி சன்னியாசி பட்டியை சேர்ந்த பிரியா(25) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியா அவரை பிரிந்து திருச்செங்கோட்டில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வருகிறார்.

அப்போது அவருக்கு திருச்செங்கோடு வெங்காளம்மன் தெருவைச் சேர்ந்த டிரைவர் தினேஷ்(28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்திற்கு பிந்தைய உறவாக மாறியது. இருவரும் கணவன் - மனைவி போல் சேர்ந்து வாழ்ந்தனர்.

இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு கார்த்திக்கை, தினேஷ் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் கார்த்திக்கிடம் உனது மனைவி உன்னுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக ஆசைப்படுகிறார். அது தொடர்பாக நேரில் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கார்த்திக் தான் கோவையில் தங்கியிருக்கும் முகவரியை கூறினார். இதனையடுத்து நேற்று முன்தினம் பிரியா தினேசை அழைத்து கொண்டு கோவை வந்தார். பின்னர் வெள்ளலூர் கஞ்சிகோணாம்பாளையத்தில் கார்த்திக் வேலை பார்க்கும் கம்பெனி அருகே பிரியா அவருடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த தினேஷ் தகாத வார்த்தைகளால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திக்கை குத்த முயன்றார். இதனை கார்த்திக் தடுக்க முயன்றபோது அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. வலியால் அவர் துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அதற்குள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கத்திக் குத்தில் காயமடைந்த கார்த்திக்கை சிலர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியா மற்றும் தினேசை கைது செய்தனர்.

பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சேர்ந்து வாழ்வதாக நாடகமாடி வாலிபரை கத்தியால் குத்திய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe