கோவக்காய் கிரேவி.. நா ஊறும் இந்த ரெசிபியை ட்ரை பன்னலாமா..?

published 1 year ago

கோவக்காய் கிரேவி..  நா ஊறும் இந்த ரெசிபியை ட்ரை பன்னலாமா..?

கோவைக்காயில் நிறையச் சத்துக்கள் இருக்கிறதா? ஆம், கோவைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. கோவைக்காய் தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல் போன்ற பல நோய்களுக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.இதை எப்படிச் சமைத்துச் சாப்பிடுவது என்று கவலைப்படுகிறீர்களா? மருத்துவக் குணம் நிறைந்த கோவைக்காயைச்  சத்துடன் கூடிய ருஷியான உணவாக எப்படிச் சமைப்பது என்பதைக் காண்போம்.


தேவையான பொருட்கள்

கோவைக்காய்

நிலக்கடலை

தேங்காய்

கசகசா

மிளகு

சீரகம்

மல்லி

முந்திரிப் பருப்பு

பட்டை

ஏலக்காய்

கிராம்பு

பிரியாணி இலை

புளி

வெங்காயம்

பச்சை மிளகாய்

இஞ்சி பூண்டு பேஸ்ட்

தக்காளி

மிளகாய்த் தூள்

மஞ்சள் தூள்

உப்பு

செய்முறை

நிலக்கடலை, தேங்காய், கசகசா, மிளகு, சீரகம், மல்லி, முந்திரிப் பருப்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, ஆகிய பொருட்களை வாணலியில் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த மசாலா பொருட்களை ஆற விட்டு மிக்ஸியில் சேர்த்து இரண்டு சுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிது கெட்டியான புதுக்கரைசலைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நல்ல பேஸ்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கோவைக்காயை நன்றாகக் கழுவி விருப்பமான வடிவில் வெட்டிக்கொள்ள வேண்டும். சூடான வாணலியில் எண்ணெய் சேர்த்து கோவைக்காயை வதக்க வேண்டும். ஒரு பத்து நிமிடம் வரை எண்ணெய்யில் வதக்கிய கோவைக்காயைத் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த எண்ணெய்யில் இரண்டு பிரியாணி இலை சீரகம் சேர்த்துப் பொரிய விட வேண்டாம். சீரகம் பொரிந்தவுடன் அதில் ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் லேசாக வதங்கி வரும் போது இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பின்னன் ஒரு தக்காளியை நறுக்கிச் சேர்த்துக்கொள்ள வேண்டும். தக்காளி வதங்கிய பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து நன்றாகக் கிளறி விட வேண்டும். ஸ்மில் வைத்து 5 நிமிடம் வதக்கிய பின் தேவையான மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளற வேண்டும். மசாலாவில் எண்ணெய் பிரிந்து வரும் போது லேசாக வதக்கி வைத்த கோவைக்காயைச் சேர்க்க வேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து விட வேண்டும். குழம்பு தயாரானதுடன் லேசாக மிளகு தூள் சேர்த்து இறக்கி விடலாம். (தேவை என்றால் நன்றாக வதக்கிப் பொரியல் போல் வைத்துக் கொள்ளலாம்.) இந்த கிரேவி தோசை, சப்பாத்தி, சுடு சாதம் போன்றவற்றுக்கு அட்டகாசமான சுவையைத் தரும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe