காபியை ஆரோக்கியமான பானமாக மாற்ற சில வழி முறைகள்

published 1 year ago

காபியை ஆரோக்கியமான பானமாக மாற்ற சில வழி முறைகள்

காலையில் தினமும் எழுந்தவுடன் காபி குடிப்பது நம்மில் பலரது  பழக்கமாக இருக்கிறது.மாற்றிக்கொள்ள முடியாத பழக்கமாக இருப்பதனால் நாம் எந்த டயட்டுக்கு வந்தாலும் காபியை மட்டும் சேர்த்துக்கொள்வோம்.

காபி மூலம் உடலில் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இதில் நன்மையையும் உள்ளது. அதேசமயம், இவற்றினால் நமக்குத் தீமையும் உண்டு. தீமையை விளக்கி  ஆரோக்கியமான உணவாக எப்படி மாற்றமுடியும் என்பதைப் பார்க்கலாம்.

பிளாக் காபி

எந்த இனிப்பும், பால் அல்லது கிரீமும் சேர்க்கப்படாத பிளாக் காபியைப் பருகலாம். இது கிட்டத்தட்ட கலோரி இல்லாதது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.

சர்க்கரையைக் குறைக்கலாம்

நம்மில் பலருக்குச் சர்க்கரை இல்லாமல் காபியை அருந்தப் பிடிக்காது. அப்படியென்றால், சர்க்கரையைக் குறைந்த அளவு பயன்படுத்துவதே நல்லது. மேலும்,சர்க்கரை சேர்க்காமல் அருந்துவதே உடலுக்கு நல்லது.  ஸ்டீவியா அல்லது பழ இனிப்புகளைப் பயன்படுத்தலாம்.

கிரீம் பயன்பாட்டைத் தவிர்க்கவும்

கிரீம்கள் மற்றும் சுவையூட்டப்பட்ட சிரப்களைப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அவற்றில் கலோரிகள் அதிகம். அதற்குப் பதிலாக, நீங்கள் குறைந்த கொழுப்பு பால், பாதாம் பால் அல்லது ஓட்ஸ் பால் பயன்படுத்தலாம்.

இலவங்கப்பட்டை சேர்க்கலாம்

உங்கள் காபியில் இலவங்கப்பட்டை தூள் அல்லது மற்றொரு வகை இலவங்கப்பட்டையைப் பயன்படுத்துவது  உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe