நம்ம கோவை ரயில் நிலைத்திற்கு அடிச்ச 'LUCK' - நீங்களே ஆச்சரியப்பட போறீங்க பாருங்க...

published 1 year ago

நம்ம கோவை ரயில் நிலைத்திற்கு அடிச்ச 'LUCK' - நீங்களே ஆச்சரியப்பட போறீங்க பாருங்க...

கோவை: வளர்ச்சி பாதையை நோக்கிப் போய் கொண்டிருக்கும் நம் ஊரின் அடுத்த கட்ட மாற்றம் தான் நம் கோவை வடக்கு ரயில் நிலையத்தையும் போத்தனூர் ரயில் நிலையத்தையும் தேடி வரப்போகும் இந்த 'அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம்'.

'அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம்' என்பது ரயில் நிலையங்களின் மேம்பாட்டைக் குறிக்கும் திட்டமாகும். நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இத்திட்டம், 2022-ஆம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. 

இத்திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் உள்ள 1,309 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் முயற்சியை இந்திய ரயில்வேஸ் செய்யவுள்ளது. உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கம் ரயில் நிலையங்களை நகர்ப்புறத்தோடு ஒருங்கிணைத்து, ரயில் பாதைகளை மேம்படுத்தி, ஊர்களுக்கு இடையேயான போக்குவரத்தை அதிகப்படுத்துவது ஆகும். 

மாற்றுத் திறன் கொண்ட தனிநபர்களுக்கான வசதிகளை வழங்கி, ரயில் நிலையங்களை அனைவரும் சுலபமாகப் பயன்படுத்தும்படி மேம்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு எடுக்கப்படும் முயற்சிகளும் அடங்கும்.

வளர்ச்சி பாதையை நோக்கிப் போய் கொண்டிருக்கும் நம் ஊரின் அடுத்த கட்ட மாற்றம் தான் நம் கோவை வடக்கு ரயில் நிலையத்தையும் போத்தனூர் ரயில் நிலையத்தையும் தேடி வரப்போகும் இந்த ‘அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம்’. இத்திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களுக்கான 'மாஸ்டர் பிளான்'-னைத் தயாரித்து, அதன்படியான பணிகள் ஒவ்வொரு கட்டமாக நிறைவேற்றப்படும். 

முதல் கட்டப் பணிகள் வரும் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவடையும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளன. அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் பயணிகளுக்கான தகவல் அமைப்பு, உயர் தர ஓய்வறைகள், நவீன வசதிகள் கொண்ட காத்திருப்புக் கூடம், தூய்மையான கழிப்பறைகள், இலவச வைஃபை, ஆகியவும் வழங்கப்படும்.

 

'ஒரு நிலையம்-ஒரு தயாரிப்பு' என்ற திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளை விற்பனை செய்யும் இயந்திரங்களும் நிறுவப்படும். ரயில் பாதைகளை விரிவுபடுத்துதல், தேவையற்ற கட்டமைப்புகளை அகற்றுதல், சரியாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு அடையாளங்களைச் ஏற்படுத்துதல், பாதுகாப்பு குறியீடு விளக்குகளை அமைத்தல், பிரத்யேக பாதசாரி பாதைகள் அமைத்தல், லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதிகளை நிறுவுதல், வாகன நிறுத்துமிடங்கள் அமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் 508 ரயில் நிலையங்களுக்கான திட்டப்பணிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார். இவ்விழாவை முன்னிட்டு, சேலம், திருப்பூர், கரூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள 8 பள்ளிகளில், சுமார் 700 பள்ளி மாணவர்களுக்கு இடையில் இசை, நடனம், கட்டுரை, பேச்சு, வரைதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கான பரிசுகள் இந்த தொடக்க விழாவில் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe