கோவையில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான  ரூபாய் நோட்டுகளால் காட்சியளித்த அம்மன் | புகைப்படத் தொகுப்பு

published 1 year ago

கோவையில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான  ரூபாய் நோட்டுகளால் காட்சியளித்த அம்மன் | புகைப்படத் தொகுப்பு

கோவை : ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை ஒட்டி கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அருள்மிகு பரஞ்ஜோதி மாரியம்மனுக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் 208 பெண்கள் பங்கேற்ற விளக்குப் பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தமிழகம் முழுக்க உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை ஒட்டி அனைத்து அம்மன் ஆலயங்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு பரஞ்ஜோதி மாரியம்மன் அம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

2000 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 10 ரூபாய் என மொத்தம் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் மாலைகளாகவும் தோரணங்களாகவும் ரூபாய் நோட்டுக்கள் தொங்கவிடப்பட்டிருந்தது

மேலும் 208 பெண்கள் பங்கேற்ற விளக்குப் பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் விளக்கேற்றி பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe