உடனே கிளம்புங்க..! தங்கம் வாங்க இதுதான் சரியான நாள் ..!

published 1 year ago

உடனே கிளம்புங்க..! தங்கம் வாங்க இதுதான் சரியான நாள் ..!

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களில்  தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. பெண்கள் பொதுவாகவே ஆபரணங்கள் மீது பற்று அதிகம் உள்ளவர்கள். இந்நிலையில் தங்கம் விலை எப்போது குறையும் எப்போது வாங்கலாம் என எண்ணுபவர்களுக்கு  குட் நியூஸ் சொல்லும் வகையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தைக் காணலாம்.

 தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டுப் பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த 2 நாட்களாகத் தங்கம் விலை குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.ரூ.44,280-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,535க்கு விற்பனையானது.

இன்றைய (ஆகஸ்ட் 09) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,240-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,530ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,000ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,000ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை 60 பைசா குறைந்து கிராம் வெள்ளி ரூ.76.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe