கோவையில் வளர்ப்பு நாய் கடித்து வாலிபர் காயம்; தம்பதி மீது வழக்கு!

published 2 weeks ago

கோவையில் வளர்ப்பு நாய் கடித்து வாலிபர் காயம்; தம்பதி மீது வழக்கு!

கோவை: கோவையில் ‘ராட்வீலர்’ நாய் கடித்து வாலிபர் காயமடைந்த விவகாரத்தில் தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவில் பொதுமக்கள் நாய்களால் கடிபடும் சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து, 23 வகை நாய் இனங்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதில் ஜெர்மனியை தாயமாக கொண்ட ‘ராட்வீலர்’ ரக நாயும் ஒன்று. இது போன்ற தடைசெய்யப்பட்ட நாய் இனங்களை உரிமம் இல்லாமல் வளர்க்க கூடாது என சில கட்டுப்பாடுகளும் உள்ளது.

இந்த நிலையில், ஆக்ரோஷமான இந்த இன நாய் கடித்து கோவையில் வாலிபர் ஒருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பீளமேடு ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் மனோஜ் (35). இவரது மனைவி சபீதா. இவர்கள் வீட்டில் ‘ராட்வீலர்’ இன நாய் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சாலையில் பைக்கில் சென்ற பீளமேடு கிரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அருண்குமார் (28) என்பவரை மனோஜ் வளர்த்த நாய் கடித்தது.

இதில் காயம் அடைந்த அருண்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அருண்குமாரின் மனைவி துர்க்கா(22) பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், மனோஜ், அவரது மனைவி சபீதா ஆகியோர் தடைசெய்யப்பட்ட இனமான ராட்வீலர் நாயை வீட்டில் அடைத்து வைக்காமல், அஜாக்கிரதையாக வீதியில் சுற்றி திரியவிட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் மனோஜ் மற்றும் அவரது மனைவி சபீதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe