கோவையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது- கட்டுகட்டாக பணம் பறிமுதல்…

published 1 week ago

கோவையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது- கட்டுகட்டாக பணம் பறிமுதல்…

கோவை: கோவை, கே.ஜி. சாவடி  காவல் நிலைய பகுதியில் பாலக்காடு சேர்ந்த சுரேஷ் (45) வேலந்ததாவளம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது  அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர் சுரேசை கத்தியை காட்டி மிரட்டி   அவரிடம் இருந்த ரூபாய் 54,00,000/-  பணத்தை வழிப்பறி
செய்து அங்கு இருந்து தப்பிச் சென்று உள்ளனர். 

இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் கே.ஜி சாவடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்புகாரில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உத்தரவிட்டதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுமித் நாகேஷ் சலுங்கே (25) மற்றும் சனீஸ் கோவிந்தன் சலுங்கே (35) ஆகிய இரண்டு பேர் வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்தது. இந்நிலையில் தனிப்படையினர் அந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 41,00,000/- பணத்தை பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe