ஆடிக் கிருத்திகை ஸ்பெஷல் ரெசிபி..!

published 1 year ago

ஆடிக் கிருத்திகை ஸ்பெஷல் ரெசிபி..!

ஆடிக் கிருத்திகை அன்று புதிதாக முற்றிலும் வித்தியாசமான ஒரு ரெசிபியை எப்படி சுலபமாகச் செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

மக்காச் சோள மாவு - 1 கப்

தண்ணீர் - 3 கப்

சர்க்கரை - 2 கப்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

முந்திரி - 1 டீஸ்பூன்

திராட்சை - 1 டீஸ்பூன்

கேசரி பவுடர் - தேவையான அளவு

செய்முறை

முதலில் மக்காச் சோள மாவுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் மீதமுள்ள தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்குக் கிளற வேண்டும்.

பாகு பதம் வந்தவுடன், அதனுடன் சோள மா, முந்திரி, திராட்சை, கேசரி பவுடர், நெய், எலுமிச்சை சாறு மற்றும் ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கிளறி விட வேண்டும்.

இறுதியாக ஒரு தட்டில் நெய் சேர்த்து இந்த கலவையைச் சேர்த்து முந்திரி துண்டுகளைத் தூவி அலங்கரித்து எடுத்தால் சுவையான Sweet Corn அல்வா ரெடி!

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe