சச்சின், சேவாக், கம்பீர் போல் ரோஹித்துக்கும் கொடுக்க வேண்டும் - ரோஹித் சர்மா

published 1 year ago

சச்சின், சேவாக், கம்பீர் போல் ரோஹித்துக்கும் கொடுக்க வேண்டும் - ரோஹித் சர்மா

இந்தியாவில் இதுவரை 1987, 1996, மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஐ.சி.சி 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் நடைபெற்றிருக்கிறது.

அதில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்தது. அதன் பிறகு நடத்த எந்தவொரு ஐ.சி.சி 50 ஓவர் உலகக்கோப்பைப் போட்டியிலும் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றவில்லை. 

அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் வைத்து நடைபெறவுள்ள உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி எப்படியாவது வெல்ல வேண்டும் என்பது அனைவரின் கனவாக உள்ளது. இதனால் இந்திய அணியை கேப்டன் ரோஹித் சர்மா சரியான முறையில் வழிநடத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ரோஹித் சர்மா குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்துப் பேசிய யுவராஜ் சிங், "ரோஹித் சர்மா சிறந்த வீரர். ஒரு நல்ல கேப்டனும் கூட. இருப்பினும் அவருக்குச் சிறந்த அணியைக் கொடுக்க வேண்டும். எம்.எஸ். தோனியும் சிறந்த கேப்டன்தான். அவருக்கு அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட அணி கொடுக்கப்பட்டது. சச்சின், சேவாக், கம்பீர், ஜாகீர் போன்றவர்கள் இருந்தனர். அதுபோல ரோஹித்துக்கும் கொடுக்க வேண்டும்!" என்று தெரிவித்திருக்கிறார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe