கோவையில் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்.

published 1 year ago

கோவையில் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை : பெண்கள் உரிமை தொகை, காவிரி நதி நீர், என்.எல்.சி நிர்வாக பிரச்சினை உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தி தேமுதிக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாகக் கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். இதில் கோவை காந்திபுரம் பகுதி கழகப் பொறுப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மேலும் இதில் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் சந்துரு தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெகன் வடக்கு மாவட்டச் செயலாளர் சண்முகவடிவேல் மாநில தொழிற்சங்க பேரவை துணை சட்ட ஆலோசகர் முருகராஜ் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நதிநீரைக் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் என்.எல்.சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் கண்டிக்கப்பட்டன. 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe