குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஜவ்வரிசி - கேரட் கேசரி

published 1 year ago

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஜவ்வரிசி - கேரட் கேசரி

ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும், செல்களைப் புதுப்பிக்கவும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் செய்கிறது.

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி - 1 கப் (நைலான் ஜவ்வரிசி) 8 மணி நேரம் ஊறவைத்து வடிகட்ட வேண்டும்.

நெய் - 4 ஸ்பூன்

கேரட் - 1 கப் துருவியது

முந்திரி, பாதாம் - துருவி நெய்யில் வறுத்தது கால் கப்

வெல்லம் - முக்கால் கப் அல்லது ஒரு கப் (சர்க்கரை அதை வேண்டுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம். சர்க்கரை வேண்டுமென்றாலும் ஒரு கப் அல்லது உங்கள் இனிப்பு சுவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம்)

ஏலக்காய் - 2 (பொடித்தது)

செய்முறை

ஒரு கடாயில் நெய்விட்டு, முந்திரி, பாதமை வறுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதிலே கேரட்டை நன்றாகப் பச்சை வாசம் போகும் அளவு வதக்கிக்கொள்ளவேண்டும். இதையும் தனியா எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் அல்லது பால் உங்கள் விருப்பத்திற்கு எது வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது இரண்டையும் சேர்த்தும் எடுத்துக்கொள்ளலாம்.

கொதி வந்தவுடன் அதில் ஜவ்வரிசியை சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.

ஏற்கனவே 8 மணி நேரம் ஊறிய ஜவ்வரிசி நன்றாகக் கொஞ்சம் நேரத்திலேயே வெந்துவிடும். அதனுடன் துருவி, வதக்கி வைத்துள்ள கேரட் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இரண்டையும் நன்றாகச் சேர்த்துக் கலந்து கொண்டே, சர்க்கரை பயன்படுத்தினால் சர்க்கரையை நேரடியாகச் சேர்த்துவிடவேண்டும். வெல்லம் வேண்டுமென்றால் வெல்லத்தைப் பாகு எடுத்து, வடிகட்டி சேர்த்து நன்றாகக் கிளறவேண்டும்.

பின்னர் பொடித்த ஏலெக்காய், ஏற்கனவே வறுத்து வைத்த முந்திரி சேர்த்து இறக்கிவிட வேண்டும்.

அனைத்து வகை இனிப்புகளிலும் தேவைப்பட்டால் குங்குமப்பூவைப் பாலில் ஊறவைத்துச் சேர்த்துக்கொள்ளலாம். இதிலும் சேர்த்துக்கொள்ளலாம். முற்றிலும் உங்கள் சாய்ஸ்தான்.

சூடான, சுவையான ஜவ்வரிசி - கேரட் கேசரி. குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் மாலை நேர ஸ்னாக்ஸாக இதைக்கொடுத்தால் அவர்கள் விரும்பி உண்பார்கள். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பும் ஒரு மாலைநேர சிற்றுண்டியாக இது இருக்கும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe