இந்தியாவின் பன்முகத் தன்மையை உணர்த்திய கல்லூரி மாணவிகள் நிகழ்ச்சி

published 1 year ago

இந்தியாவின் பன்முகத் தன்மையை உணர்த்திய கல்லூரி மாணவிகள் நிகழ்ச்சி

கோவை : கோவையில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி திரு.எஸ். சுதாகரன்  கலந்து கொண்டார். 

அப்போது அவர் கூறியதாவது; "உலகில் உள்ள பிற நாடுகளைக் காட்டிலும் பெருமை மிக்கது நம் நாடு. இந்தியர்களாகிய நம்மை மனதால் தாழ்த்தும் எந்த எண்ணத்தையும் நாம் அனுமதிக்கக் கூடாது, காலனியச் சிந்தனைகளில் நம்மைத் தொலைத்து விடாமல், தலைசிறந்த நம் நாட்டின் சிறப்புகளை உணர்ந்து போற்ற வேண்டும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் முன்னதாகக் கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா தலைமை தாங்கினார். அப்போது,சுதந்திரத்தின் பெருமையையும் இன்று மக்கள் நாட்டுக்காகச் செய்யவேண்டிய கடமைகளையும் பற்றி எடுத்துரைத்தார்.

கல்லூரி மாணவிகளின் உரையோடு மட்டுமல்லாமல், இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக இராணுவ வீரர் அபிநந்தன் வர்த்தமானின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் தேசிய மாணவர் படையின் மைம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe