தக்காளி விலை இப்போதான் இறங்கி இருக்கு.. அதற்குள்ளவா வெங்காயம்.. கோவையில் என்ன விலை?

published 1 year ago

தக்காளி விலை இப்போதான் இறங்கி இருக்கு.. அதற்குள்ளவா வெங்காயம்.. கோவையில் என்ன விலை?

கோவை: கோவையில் கடந்த சில மாதங்களாக தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்று தற்போது சற்று குறைந்துள்ளது. தக்காளியை போல அடுத்து அத்தியாவசிய தேவையான வெங்காயம் இப்போது விலை அதிகரித்துள்ளது.

கோவையில் 15 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த சின்ன வெங்காயம் தற்போது 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தக்காளி விலை அதிகரித்ததே  ஏழை மற்றும்  நடுத்தர மக்களை மிகுந்த சிரமத்துக்குள்ளாக்கியது. இதனிடையே தற்போது வெங்காயம் விலையும் மெல்ல மெல்ல அதிகரித்து கொண்டே வருகிறது.

கோவையை பொறுத்தவரையில் சின்ன வெங்காயம் ஆலந்துரை, பூண்டி, சிறுவாணி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், நாசிக், பூனே உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சந்தைகளுக்கு வருகிறது. இதே போல் பெரிய வெங்காயம் மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.

கடந்த மாதம் கோவையில் சின்ன வெங்காயமும், பெரிய வெங்காயமும் 15 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் 45 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விலை விற்பனை செய்யப்படுகிறது.

பெரிய வெங்காயம் விலை 25 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர் வரத்து குறைவு மற்றும் வடமாநிலங்களில் மழை காரணமாக விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே தமிழக அரசு முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக வெங்காய பதுக்கலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தக்காளியைப் போலவே வெங்காயமும் ஏழை மக்களுக்கு கண்ணீரை வரவழைத்து விடும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe