இந்த மாத இறுதியில் இரவு வானத்தை பார்க்க மிஸ் பண்ணீடாதீங்க..!

published 1 year ago

இந்த மாத இறுதியில் இரவு வானத்தை பார்க்க மிஸ் பண்ணீடாதீங்க..!

கோவை: இந்த மாத இறுதியில் 'ப்ளூ மூன் - டே' வருகிறது. அப்படி என்றால் என்னவென்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

அழகிய நிலவைப் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. அழகுக்கு உவமையாக கூறப்படும் ஒரு துணைக்கோள் நிலா. தமிழ் பாடல்கள் பலவற்றிலும் இந்த உவமையை கேட்டிருப்பீர்கள்.

"நிலவே முகம் காட்டு என்னை பார்த்து.. ஓ வெண்ணிலா இரு வானிலா..!, பாடு நிலாவே தேன் கவிதை...  நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரனும்... வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ... கருப்பு நிலா  நீதான் கலங்குவதேன்... நிலா நீ வானம் காற்று மழை.." இப்படியாக பல பாடல்கள் நிலவை உவமையாக வைத்து பாடப்பட்டுள்ளன.

எந்த காலத்திலும் நிலவை உவமையாக வைக்காமல் ஒரு அழகிய கவிதையை எந்த கவிஞரும் எழுதியதும் இல்லை, இனி எழுதப்போவதும் இல்லை. இப்படிப்பட்ட நிலாவின் தென் துருவத்தை தான் தற்போது நாம் தொட்டிருக்கிறோம்.

பவுர்ணமி நாளில் பூவிக்கு மிக அருகில் முழுமையாக தெரியும் நிலாவை விரும்பி பார்ப்பவர்கள் பலர். இந்த நாளில் மொட்டை மாடிகளிலும், மைதானம் போன்ற இடங்களிலும்  நிலாச்சோறு சாப்பிடும் வழக்கம் இன்றளவில் நம் மக்களிடம் உள்ளது.

இப்படி, பவுர்ணமிகளுக்கு எல்லாம் பவுர்ணமியாக வருகிறது 'ப்ளூ மூன்- டே. ப்ளூமுன் என்ற வார்த்தையை அவ்வப்போது கேட்டிருப்பீர்கள்.

ப்ளூ மூன் - டே

இது பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வரும்போது, இரண்டாவது பௌர்ணமி அன்று தான் இந்த 'ப்ளூ மூன்' தெரியும். இந்த நாளில் நிலா பூமிக்கு மிக அருகில் இருக்கும். இந்த நாளில் பூமியைச் சுற்றியுள்ள சந்திரனின் சுற்றுப்பாதை சுமார் 5 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதன் மூலமாக வழக்கமான பவுர்ணமி நாட்களை விட நிலாவை பெரிதாகவும், துல்லியமாகவும், கவர்ந்து இழுக்கும் நிறத்திலும் பார்க்க முடியும். இந்த 'ப்ளூ மூன்' வரும் 30ம் தேதி தெரிய உள்ளது. இந்த நாளில் இரவு பிரம்மாண்டமாக தோன்ற உள்ள நிலாவை பார்ப்பதற்கு ரெடியா இருங்க கோவை மக்களே.

ப்ளூ மூன் - டே அன்று  நிலவை வர்ணிக்கும் பாடலோடு, குடும்பத்தினருடன் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிடவும் தயாராக இருங்கள். அன்றைய
நாளில் உங்கள் மகிழ்ச்சியான தருணத்தை புகைப்படம் எடுத்து  நியூஸ் க்ளவுட்ஸ் வாட்ஸ்-அப் எண்ணிற்கு (99444 38011) மறக்காமல் பகிர்ந்திடுங்கள். புகைப்பட செய்தியாக பதிவு செய்கிறோம். 

மறக்காமல் இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாருடன் பகிர்ந்திடுங்கள் 
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe