கோவையில் இடைநின்ற 173 பள்ளி மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டம் - ஆபரேஷன் ரீபூட்

published 1 year ago

கோவையில் இடைநின்ற 173 பள்ளி மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டம்  -  ஆபரேஷன் ரீபூட்

கோவை : கோவை மாநகரில் ஆபரேஷன் ரீபூட் என்ற திட்டத்தின் மூலம் 173 இடைநின்ற பள்ளி மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோவை மாநகரில் இடைநின்று மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை நகரில் இளம் குற்றவாளிகளை தடுக்கும் பொருட்டு பள்ளி செல்லாமல் இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க காவல்துறையினரால் 'ஆபரேஷன் ரீபூட்' என்ற திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் 173 இடைநின்ற பள்ளி குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதில் 23 பேர் வெளி மாவட்டத்தில் படித்து வருகின்றனர். 35 பேர் பள்ளிக்கு செல்ல உள்ளனர். பள்ளி தலைமையாசிரியர்கள், கல்வித்துறை மூலமாக இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களின் வீட்டுக்கு சென்று பள்ளி மாணவர்கள், பெற்றோர்களை சந்தித்து போலீசார் அந்த மாணவர்கள், பெற்றோர்களிடம் பேசி மீண்டும் பள்ளி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் பள்ளி செல்லாதது குறித்து காரணம் கேட்டறிந்து, படிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

இவ்வாறு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
உடன் கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீஸ், சண்முகம் ஆகியோர் இருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe