கோவையில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 305 பேர் கைது

published 1 year ago

கோவையில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 305 பேர் கைது

கோவை: கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம்  முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்டடனர். இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்டடனர். அப்போது அவர்கள் விலைவாசி உயர்வை கண்டித்தும், அதிகரித்து வரும் வேலையின்மையை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உட்பட 305 பேரை கைது செய்தனர். இதே போல் கோவையில் சரவணம்பட்டி, மேட்டுப்பாளையம் ரோடு பி.எஸ்.என்.எல் அலுவலகம் உட்பட 9 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe