விழிகளை புதைத்துச் செல்லாமல் விதைத்துச் செல்வோம்.. கோவையில் சாலையில் நின்று முழங்கிய மாணவர்கள்...!

published 1 year ago

விழிகளை புதைத்துச் செல்லாமல் விதைத்துச் செல்வோம்.. கோவையில் சாலையில் நின்று முழங்கிய மாணவர்கள்...!

கோவை: உலக கண்தானத்தை முன்னிட்டு கோவையில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக கண்தான தினம் செப்டம்பர் மாதம் 25ம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. இந்த தினத்தில் கண்தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு கோவையில் தனியார் கண் மருத்துவமனை மற்றும் செவிலியர் பறிற்சி பள்ளி சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வடகோவை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் தொடங்கி வைத்தார். இதில் கண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் இணைந்து மனித சங்கிலியை உருவாக்கினர். மேட்டுப்பாளையம் சாலையின் இரு புறங்களிலும் நின்ற மாணவர்கள்,  விழிகளை புதைத்துச் செல்லாமல், விதைத்துச் செல்வோம் என்று கோஷங்களை எழுப்பி பொதுமக்கள் மத்தியில் கண்தானம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதுகுறித்து மருத்துவர் ஜெய்ஸ்ரீ அருணா பிரகாஷ் கூறியதாவது:

உடலி உள்ள உறுப்புகளை எடுத்தால் சொர்க்கத்திற்கு செல்ல மாட்டோம் என்றும், கண்ணை தானம் செய்துவிட்டால் கண் பகுதியில் குழி ஏற்படும் என்றும் பல மூட நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைகளை உடைத்து கண் தானம் செய்வது சிறந்தது. தற்போதைய தேவையில் 25 சதவீதம் கண்கள் மட்டுமே தானமாக கிடைத்து வருகிறது

.

கண் தானத்திற்கு பிறகு மாற்று அறுவை சிகிச்சை என்பது 100 சதவீதம் வெற்றிகரமாக செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் ஒன்றாகும். கருவிழியை செயற்கையாக செய்தாலும், தானமாக கிடைக்கும் கருவிழி அளவிற்கு  சிறந்ததாக இருப்பதில்லை. எனவே கருவிழியை தானமாக மட்டுமே பெற முடியும். கண்தானம் செய்ய விரும்பினால் அதனை முன்னரே பதிவு செய்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. யாரேனும் உயிரிழந்து விட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தால், உயிரிழந்தவரிடம் இருந்து கண்களை தானமாக எடுத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு மருத்துவர் ஜெய்ஸ்ரீ அருணா பிரகாஷ் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe