விநாயகருக்கு ரோபோ மூலம் தீபாராதனை- அசத்திய கல்லூரி மாணவர்கள் வீடியோ உள்ளே...

published 1 year ago

விநாயகருக்கு ரோபோ மூலம் தீபாராதனை- அசத்திய கல்லூரி மாணவர்கள் வீடியோ உள்ளே...

கோவை: விநாயகருக்கு ரோபோ மூலம் தீபாராதனை செய்து தனியார் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் அசத்தி உள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கோவையை சேர்ந்த தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கட்ரானிக்ஸ் துறை மாணவர்கள் கண்டுபிடித்த ரோபோவை வைத்து விநாயகருக்கு தீபாராதனை காண்பிக்க செய்துள்ளனர்.

 

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவையில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை(தனியார்) சேர்ந்த மெக்கட்ரானிக்ஸ் துறை மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய ரோபோவை வைத்து கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு தீபாராதனை காண்பிக்க செய்து அசத்தியுள்ளனர்.

இதன் வீடியோவை காண லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/8cGx5EropZs?si=ugQJj-wDyoWaepGC

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe