40 லிட்டர் ரம், விஸ்கி, ஒயின்.. 150 கிலோ உலர் பழங்கள்.. கோவையில் தயாராகிறது கிறிஸ்துமஸ் கேக்

published 1 year ago

40 லிட்டர் ரம், விஸ்கி, ஒயின்.. 150 கிலோ உலர் பழங்கள்.. கோவையில் தயாராகிறது கிறிஸ்துமஸ் கேக்

கோவை: கோவையில் உள்ள லீ மெரிடியன் விடுதியில் 40 லிட்டர் மதுபான வகைகள், 150 கிலோ உலர் பழங்கள் மற்றும் பழச்சாறுகளுடன் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளது.

கிறிஸ்தவ மக்களின் புனித பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் ஒருவருக்கு ஒருவர் கேக் மற்றும் இனிப்பு வகைகளை பரிமாறி தங்களது அன்பை வெளிப்படுத்துவது வழக்கம். இந்த பண்டிகைக்கான கேக் தயாரிப்பது என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயமாக உள்ளது. பெரிய அளவில் கேக் தயாரிப்பவர்கள் பண்டிகைக்கு 45 நாட்களுக்கு முன்னதாகவே கேக் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை கலவையாக சேர்த்து அதனை ஊர வைப்பார்கள். இதனை கேக் மிக்ஸிங் செரிமொனி என்பார்கள். ஊர வைத்த மூலப்பொருட்களை எடுத்து கிறிஸ்துமசுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு சுவையான கேக்-ஐ தயாரிப்பார்கள்.

இதனிடையே வரும் டிசம்பர் மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள சூழலில், பல்வேறு நட்சத்திர விடுதிகளிலும் கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் செரிமொனி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை  அவினாசி சாலையில் உள்ள,லீ மெரிடியன் ஓட்டலில் கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் செரிமொனி நடைபெற்றது.

இதில் கேக் தயாரிக்கத்  தேவையான  முந்திரி, உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம், வால்நட் உள்ளிட்ட 20 வகையான உலர் பழங்கள், ஆரஞ்சு பழச்சாறு மற்றும் ஒயின், ரம், விஸ்கி உள்ளிட்ட 40 லிட்டர் மதுபான வகைகளை ஒன்றாகக் கலந்து கேக் மிக்ஸிங் செய்யப்பட்டது. இதில் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கேக் மூலப்பொருட்களை சேர்த்து அதனை பதப்படுத்தி வைத்தனர்.

இதுகுறித்து லீ மெரிடியன் தலைமை செஃப் டோமினிக் சேவியர் கூறுகையில், "இந்தாண்டு கிறிஸ்துமஸ் திருவிழாவுக்காக 150 முதல் 200 கிலோ பிளம் கேக் மற்றும் புட்டிங் கேக் தயாரிக்க உள்ளோம். இந்த கலவை அடுத்த 45 நாட்களுக்கு ஊர வைக்கப்படும். தொடர்ந்து கேக் தயாரிக்கப்படும். இது வழக்கமான கேக் போல பார்க்கப்படுவதில்லை. மாறாக கிறிஸ்துமஸ் சிறப்பு கேக்-ஆக பார்க்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் நாளில் இந்த கேக் எங்களது விடுதியில் விற்பனை செய்யப்படும்" என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe