கோவை மத்திய சிறையில் ஐஎஸ்ஐஎஸ் வழக்கில் கைதானவர்கள் தப்பிக்க முயற்சி- காவலர்கள் மீது தாக்குதல்...

published 1 week ago

கோவை மத்திய சிறையில் ஐஎஸ்ஐஎஸ் வழக்கில் கைதானவர்கள் தப்பிக்க முயற்சி- காவலர்கள் மீது தாக்குதல்...

கோவை: ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத வழக்கில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர்கள் தப்பிக்க முயற்சி செய்த போது,தடுக்க வந்த  காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 2 பேர் காயமடைந்தனர்.

ஈரோட்டை சேர்ந்த ஆசிப் முஸ்தகின், கன்னியாகுமரியைச் சேர்ந்த அப்துல் சலீம் ஆகிய இருவரும்  ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்தாக கடந்த 2022 ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.நேற்று இரவு இவர்கள் இருவரும்,சிறை வார்டன்களை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு பணியில் இருந்த வார்டன்கள் தப்பிக்க முயன்ற இருவரையும் பிடித்து சிறையில் அடைத்தனர். ஆசிப் முஸ்தகின், அப்துல் சலீம் ஆகிய இரு சிறைக் கைதிகள் மீது, மத்தியசிறை ஜெயிலர் மனோரஞ்சிதம்,ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், சிறைகைதிகள் இருவர் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை கைதிகள் தாக்கியதில் காயம் அடைந்த சிறைகாவலர்கள் அழகர்சாமி,வாசுதேவன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe