கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 920 பேர் மீது வழக்குப்பதிவு…

published 1 day ago

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 920 பேர் மீது வழக்குப்பதிவு…

கோவை: கோவையில் தடையை மீறி பேரணி சென்ற பாஜ., மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 920 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை குண்டு வெடிப்பு கைதி மற்றும் அல் உம்மா இயக்க தலைவர் பாஷா கடந்த 16ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து இவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பூ மார்க்கெட் திப்பு சுல்தான் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது. ஊர்வலமாக சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ., மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் இதை கண்டித்து நேற்று பாஜ., கருப்பு தின பேரணி நடத்தப்படும் என ஏற்கானவே அறிவிப்பு வெளியிட்டனர். 

ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில், தடையை மீறி நேற்று காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி செல்ல பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, பாஜ., எம்எல்ஏ வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், நிர்வாகிகள் உள்ளிட்டோர் குவிந்தனர். தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக அண்ணாமலை உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் காட்டூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் இரவில் விடுவிக்கப்பட்டனர். 

இந்த நிலையில், தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பாஜ., மாநில தலைவர் அண்ணாமலை, காடேஸ்வரா சுப்பிரமணியம், விஷ்வ இந்து பரிஷத் சிவலிங்கம், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி, பகுதி செயலாளர் மார்க்கெட் கிருஷ்ணா, பாஜ., மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட 920 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe