மகனின் மாற்றுச் சான்றிதழை பெற்றுத்தர உதவுங்கள்- கோவை மாவட்ட ஆட்சியரிடம் தந்தை மனு…

published 4 hours ago

மகனின் மாற்றுச் சான்றிதழை பெற்றுத்தர உதவுங்கள்- கோவை மாவட்ட ஆட்சியரிடம் தந்தை மனு…

கோவை: மகனின் மாற்றுச் சான்றிதழை பெற்றுத்தர உதவுமாறு செல்வராஜ் என்பவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய செல்வராஜ் கூறுகையில், தான் கைரேகை ஜோதிடம் பார்த்து வருவதாகவும் தனது மகன் பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்ததாகவும் கூறினார். குடும்ப சூழல் காரணமாக பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை என்றும் அதனால் தனது மகனின் படிப்பை பாதியில் நிறுத்தியதாகவும் கூறினார். 

தற்போது அந்த பள்ளியில் தனது மகனின் மாற்றுச் சான்றிதழை கேட்டால் தர மறுப்பதாகவும் கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் கூறுவதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது ஊட்டியில் உள்ள அரசு பள்ளியில் தனது மகனை கல்விக்காக சேர்த்திருந்ததாகவும் அங்கு மாற்றுச் சான்றிதழை கொண்டு வரும்படி கேட்டதாகவும் கூறிய செல்வராஜ், அதனால் தனது மகன் பள்ளிப்படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். தனது மகனின் மாற்றுச் சான்றிதழை பெற்றுத்தர உதவ வேண்டும் எனக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், உரிய நடவடிக்கை எடுத்து தனது மகனின் மாற்றுச் சான்றிதழை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe