நடிகர் விஜயின் அரசியல் பயணம், AI தொழில்நுட்பம் உட்பட பல்வேறு விஷயங்களை கோவையில் பகிர்ந்து கொண்ட நடிகர் நடராஜ்...

published 7 hours ago

நடிகர் விஜயின் அரசியல் பயணம், AI தொழில்நுட்பம் உட்பட பல்வேறு விஷயங்களை கோவையில் பகிர்ந்து கொண்ட நடிகர் நடராஜ்...

கோவை: கோவையில் நடைபெறும் சினிமா சூட்டிங்க்காக  வந்திருந்த பிரபல ஒளிப்பதிவாளரும் திரைப்பட நடிகருமான நடராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், விமர்சனங்களை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் மக்கள் காசு கொடுத்து பணம் பார்க்கிறார்கள் அதில் உள்ள நிறைவுறைகளை அவர்கள் சொல்வார்கள் அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்றார்.  

அல்லு அர்ஜுன் விவகாரம் குறித்தான கேள்விக்கு அது அவருடைய பிரச்சனை இதில் என்ன நடந்தது என்று தெளிவாக தெரியாது, அந்த பெண் அங்கு வந்த போது இருந்தாரோ அதன் பிறகு இறந்தாரா என்ன நடந்தது என்று தெரியாது என்றார்.

ஓடிடி தளத்தில் என்ன பிரச்சனை இருக்கின்றது? என கேள்வி எழுப்பிய அவர் அது பரிணாம வளர்ச்சி என்றும் அதனால் நாம் தற்போது போனில் படம் பார்க்கும் அளவிற்கு வந்து விட்டோம் என்றார். மேலும்  விருச்சுவல் ரியாலிட்டியாக படம் பார்க்கும் அளவிற்கு வந்து விடுவோம் இது வளர்ந்து கொண்டே தான் இருக்கும் என்றார். 
ஒரு காலத்தில் 50 லட்சம் ரூபாயில் பணம் எடுத்துக் கொண்டிருந்தனர் ,தற்பொழுது 120 கோடி ரூபாய் போட்டு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றார். மல்டிபிளக்ஸ் என்பது வளர்ந்து கொண்டே தான் இருக்கும்  என்றும் அதை மாற்ற முடியாது மக்களும் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள் நல்ல படங்களுக்கு வரவேற்பும் கிடைக்கும் என்றார்.

Ai தொழில்நுட்பத்தால் பிரச்சனை இருக்கின்றது அதை நாம் அளவாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் அனுமதி இல்லாமல் அதிகம் பயன்படுத்தும்  பொழுது தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்றார். இந்த தொழில்நுட்பத்தில் நல்லதும் செய்யலாம் படைத்தலைவன் படத்தில் விஜயகாந்தை காண்பித்துள்ளனர், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சிதான் அது போன்று நல்ல காரியத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். 
தற்போது இரண்டு படங்களில் நடித்துள்ளேன் சூர்யா படத்தில் கோவை வந்துள்ளேன் என்றார்.
நடிகர் விஜய் அரசியல் வருகை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நடராஜ் அது அவருடைய தனிப்பட்ட முடிவு, அரசியலுக்கு வந்து விட்டார் பொதுக்கூட்டங்கள் போட்டு விட்டார் என்னை பொருத்தவரைக்கும் அவர் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம்  அதே சமயம் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தியது எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் மன வருத்தமாக உள்ளது என்றார்.

தமிழும் நிறைய படங்கள் பிரமாண்டமான படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது என்றும் இப்போது வந்து கொண்டிருக்கிற படங்கள் அனைத்தும் பிரம்மாண்டமான படங்கள் தான் அது கண்டன்ட்டை வைத்து தான் நீங்கள் பார்க்க வேண்டும் என்றார். கங்குவா ஒரு நல்ல படம்  சில நேரங்களில் நம்முடைய ஏர்போர்ட் ஆடியன்ஸ்க்கு போய் சேரும் அது சேரவில்லை கண்டிப்பாக இரண்டாம் பாகம் வந்தால் புரிவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றது என்றார். மொத்தமாக பார்த்தால் தான் அது தெரியும் அதை பார்க்காமல் முதல் பாகத்தை மட்டும் வைத்து முடிவுக்கு வருவது சரியல்ல என்றார்.

தற்போது வரைக்கும் இரண்டு மூன்று படங்கள் நடித்துக் கொண்டிருக்கின்றேன் இன்னமும் அதற்கு பெயர் வைக்கவில்லை கூடிய சீக்கிரம் ஒளிப்பதிவாளராக என்னை பார்க்கலாம் என்றார். சதுரங்க வேட்டை படம் போல பல பல மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றும் அந்த படம் வரும்போது இந்த பிரச்சனைகள் இருந்தது இப்போதும் அந்த பிரச்சனைகள் இருக்கின்றது அது ஒரு விழிப்புணர்வு படம் என்றார். புஷ்பா2 திரைபடம் இன்னமும் பார்க்கவில்லை சில வேலைகள் உள்ளது, அதை முடித்த பின்னர் தான் படம் பார்க்க வேண்டும் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe