குற்றவாளிகள் சரவணபவனில் டீ சாப்பிடுவது போல் அங்கும் இங்கும் சென்று வருகிறார்கள்- கோவையில் அண்ணாமலை பேட்டி...

published 20 hours ago

குற்றவாளிகள் சரவணபவனில் டீ சாப்பிடுவது போல் அங்கும் இங்கும் சென்று வருகிறார்கள்- கோவையில் அண்ணாமலை பேட்டி...

கோவை: நவ இந்தியா பகுதியில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜாபர் சாதிக் வழக்கை பொறுத்தவரை,  Enforcement சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு வாதத்தை முன்வைத்துள்ளார்.  CBI சிறப்பு நீதிமன்றத்தில் இது குறித்தான ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது என்றும்  அப்போது உயர் நீதிமன்ற த்தில் இந்த முறை சரியா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்பொழுது நீதிபதி டெக்னிக்கலாக கேள்விகளை எழுப்பியதாகவும் அதை எனக்கு ஆச்சரியத்தை தருவதாகவும் கூறினார். ஒரு மூத்த நீதிபதி வழக்கிலிருந்து விலகுவதாக கூறுவது வேறு ஏதேனும் வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்குமா? என்பதை சொல்ல வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உள்ளது என தெரிவித்தார். இந்த வழக்கில் மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றும் அவிழும் பொழுது வித்தியாசமாக அவிழ்வதாகவும், வேகமாக இதில் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் ஆளும் கட்சியை சார்ந்த நபர் என்ற Clarification வேண்டும் எனவும் தெரிவித்தார். இது குறித்து அவர்களாக சொல்லும் வரை எனக்கும் ஒன்றும் தெரியாது எனவும் இதை தெரியப்படுத்த வேண்டிய கடமை இந்த வழக்கிற்கு உள்ளது என தெரிவித்தார். இதற்கான விளக்கம் கிடைக்கும் வரை தனிப்பட்ட முறையில் எந்த கருத்தையும் கூறுவதற்கு விரும்பவில்லை என தெரிவித்தார்.

சபாநாயகர் அப்பாவு திமுக அடிப்படைத் தொண்டனை விட திமுகவிற்கு அதிக வேலை பார்ப்பது அவர்தான் எனவும் வேல்முருகன் சபையில் கேள்வி எழுப்பியதற்கு திமுக எம்பிக்களை அமைதியாக இருக்கும் பொழுது இவர் தாவினார் என சாடினார். பாஜக எம்.எல்.ஏ கேள்வி எழுப்பினாலும் கூட அவர் அவ்வாறு தான் நடந்து கொள்கிறார் என கூறினார். சபாநாயகர் அவருடைய இருக்கைக்கு நடுநிலைமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் அவ்வாறு இருக்கிறாரா என்ற கேள்வியையும் முன் வைப்பதாக தெரிவித்தார். ஆட்சியின் பதிவு விஷயங்களை பேசுவதும் அவர்தான் சட்டமன்றத்தை திமுக சார்பாக நடத்தி செல்வதும் சபாநாயகர் தான் என குறிப்பிட்டார்.  

UGC விவகாரத்தில் ஆளுநர் கூறுவது சரிதான் எனவும் இங்குள்ளவர்கள் ஆளுநருக்கும் உயர்கல்வித்துறைக்கும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என கூறினார். இதன் காரணமாக ஆறு கல்விக்கூடங்களில் வைஸ் சான்சிலர் இல்லை எனவும் இதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான் எனவும் கூறினார். மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் எனவும் கேள்வி எழுப்பிய அவர் இதனை அமைச்சரோ முதல் அமைச்சரோ திருமாவளவன் ஆகிய பேசாமல் அவர்களும் இதில் குட்டையை குழப்ப பார்ப்பதாக சாடினார். மேலும் கல்வியில் இவர்கள் அரசியல் செய்வதால் தான் ஆளுநர் அவரது கருத்தை கூறுகிறார் என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ஆளுநரா அரசியல் செய்கிறார் என கேள்வி எழுப்பிய அவர் நீங்கள் தரும் கோப்புகளில் ஆளுநர் கையெழுத்து போடுகிறார் என தெரிவித்தார். அமைச்சர் தான் அரசியல் செய்கிறார்கள் எனவும் அரசியல் செய்யக்கூடிய அமைச்சரை சரியான திசையில் ஆளுநர் வழி நடத்துகிறார் என தெரிவித்தார்.

பிறப்பை அடிப்படையாக வைத்து திருமாவளவன் கூறியது குறித்தான கேள்விக்கு பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் எனவும் நீங்கள் தீவிரவாதியை கொண்டாடுகிறீர்கள் என்றால் அதைத்தான் தவறு என நாங்கள் கூறுவதாகவும் இஸ்லாமியர்களை தவறு என கூறவில்லை எனவும் தெரிவித்தார். திருமாவளவன் 2012ல் காங்கிரஸ் திமுகவை எதிர்த்து சண்டை போட்டவர் எனவும் NCRT புத்தகத்தில் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை மெதுவாக நத்தை வேகத்தில் கொண்டு சென்றதால் நேரு சாட்டையை சுழற்றினார் என்று இருந்ததாகவும் இதை எதிர்த்தும் காங்கிரஸ் திமுகவை எதிர்த்தும் போராடியது திருமாவளவன் என தெரிவித்தார். சமூகநீதியில் காங்கிரஸ் திமுகவை விடவா நாங்கள் பின் தங்கி இருக்கிறோம்? என கேள்வி எழுப்பினார். திமுக சொல்வதை தான் திருமாவளவன் பேச வேண்டும் என்று தற்பொழுது ஆகிவிட்டதாகவும் இதற்கு தான் வருந்துவதாகவும் தெரிவித்தார்.

கோவையில் பாட்ஷா இறுதி ஊர்வலம் குறித்து அமைச்சர் ரகுபதி கூறிய கருத்துக்கு பதில் தெரிவித்த அண்ணாமலை, திமுகவை எதிர்த்து அரசியல் கட்சி போராடினால் அதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை எனவும், சில இடங்களில் கூட்டம் சேர்ந்தாலோ அல்லது இரண்டு பேர் வந்தாலோ கூட கைது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஆனால் இங்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பிய அவர் இதில் NSA சட்டம் பாயாத எனவும் பத்திரிக்கையாளர்கள் திமுகவை எதிர்த்து ஏதேனும் கருத்து தெரிவித்தால் அவர்கள் மீது இந்த சட்டத்தை பயன்படுத்துவதாக தெரிவித்தார். மேலும் அந்த இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நடந்ததா என கேள்வி எழுப்பிய அவர் இதற்கெல்லாம் வழக்கு பதிவு செய்யப்பட மாட்டார் என அமைச்சர் ரகுபதிக்கு கேள்வி எழுப்பினார். மேலும் அந்த இறுதி ஊர்வலத்தில் காவல்துறையின் கைகளை கட்டி போட்டுவிட்டு மௌனமாக அதனை பார்க்க வைத்தீர்கள் எனவும் சாடினார். இதற்காகத்தான் அனைத்து இயக்கங்களையும் சேர்த்து பாஜக நிறுவனர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தெரிவித்தார்.

என் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றால் முதல் ஆளாக ஓடி வருகிறார்கள் எனவும் 100 மீட்டர் ஓட்டப்பந்தத்தில் ஒலிம்பிக் ரேஸ் வைத்தால் கூட தங்கப்பதக்கம் வாங்குவது போல் ஓடி வருகிறார்கள் என தெரிவித்தார். என் மீது வழக்குப்பதிவு செய்வது புதிதல்ல எனவும் அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். கோவையின் சூழ்நிலையை பார்த்து 144 சட்டம் போட முடியாத எனவும் கேள்வி எழுப்பினார். தமிழக அரசியல்வாதிகளில் அனைத்து மதங்களும் சமம் என்று கூறுவது நான் தான் எனவும் என் மீது வழக்கு பதிவு செய்வதற்கு சில குழுவினர் செல்கிறார்கள் எனவும் கூறினார்.

தமிழக மக்கள் அமைச்சரை நாற்காலிகளில் இருந்து அகற்றுவதற்கு அனைத்து வேலைகளையும் ஆரம்பித்து விட்டார்கள் என தெரிவித்தார். வெள்ளூரில் விட்டல் குமார் என்ற பாஜக தொண்டரை கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் இரண்டு மணி நேரமாக காவல்துறை வரவில்லை என்று காத்திருக்கிறார்கள் என விமர்சித்த அவர் குற்றவாளிகள் சரவணபவனில் டீ சாப்பிடுவது போல் அங்கும் இங்கும் சென்று வருகிறார்கள் என தெரிவித்தார். மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும் தமிழகத்திற்கு எதிரி என்று முதல்வர் கிளம்பி விடுவதாகவும் கூறினார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து அமைச்சர் ரகுபதி தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்த அண்ணாமலை இதைவிட மோசமான கருத்தை யாரும் சொல்லவில்லை எனவும் அமைச்சர் ரகுபதியை கான்ஸ்டபிள் பயிற்சி வகுப்பில் அமர வைத்து, காவல்துறையின் வேலை என்ன? என்பதை கற்றுத் தர வேண்டும் எனவும் அமைச்சர் ரகுபதி வண்டலூரில் உள்ள தமிழக அரசு காவல்துறையின் பயிற்சி மையத்தில் எடுக்கப்படும் வகுப்புகளை கவனித்து வர வேண்டும் என கூறினார். பாஜகவினர் எப்பொழுதும் ஆயுதங்களை வைத்திருப்பார்கள் என்று அமைச்சர் ரகுபதி கூறியிருப்பதற்கு, அவர் சட்டத்துறை அமைச்சரா திமுக பேட்டை ரவுடியா என்று சந்தேகம் எழுவதாகவும், எந்த பாரதிய ஜனதா கட்சி எந்த ஆயுதத்தை வைத்து எதை செய்தார்கள் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் அமைச்சர் ரகுபதியை காவல்துறை பயிற்சி வகுப்பிற்கு அனுப்பாமல் ரவுடிகள் பரேடு நடப்பதை சட்டத்துறை அமைச்சராக சென்று பார்த்து வர வேண்டும் எனவும் கூறினார்.

2026 இல் 200 தொகுதிகளுக்கு மேல் ஜெயித்து காட்டுவோம் என்று முதலமைச்சர் கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, அது தமிழ்நாட்டிலா அல்லது வெளிநாடுகளிலா பங்களாதேஷிலா பாகிஸ்தானிலா என  கேள்வி எழுப்பி 200 தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணி டெபாசிட் இழக்கும் என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என கூறினார். மேலும் டெபாசிட் இழப்பவர்கள் தான் இது போன்று பேசுவார்கள் எனவும், 234 தாண்டி விட வேண்டாம் என முதலமைச்சரை விமர்சித்தார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து சுப்பிரமணிய சுவாமி கூறிய கருத்துக்கு பதில் அளித்த அண்ணாமலை, மோடியின் மீது இருக்கக்கூடிய கால் புணர்ச்சி நாட்டுக்கு எதிரான கால் புணர்ச்சியாக மாறக்கூடாது என்று அவரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என தெரிவித்தார். தமிழகத்தில் எங்கு தான் சண்டை நடக்காமல் இருக்கிறது என கேள்வி எழுப்பியவர் டாஸ்மார்க் முட்டையை பிரிப்பது போன்ற பல்வேறு இடங்களில் சண்டைகள் நடந்து கொண்டு தான் இருப்பதாக தெரிவித்தார். திமுகவினர் அனைத்து இடங்களிலும் தான் சண்டை போடுகிறார்கள் அது புதிது அல்ல என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe