கோவை மாவட்டத்தில் தீண்டாமை கொடுமைகள்?- திராவிடர் விடுதலை கழகம் புகார்…

published 3 hours ago

கோவை மாவட்டத்தில் தீண்டாமை கொடுமைகள்?- திராவிடர் விடுதலை கழகம் புகார்…

கோவை: கோவை மாவட்டத்தில் சில கிராமங்களில் உள்ள தீண்டாமை கொடுமைகளின் முதற்கட்ட பட்டியலை சமர்ப்பித்துள்ளதாகவும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்துள்ள மனுவில், தேநீர் விடுதிகளில் இரட்டை குவளை முறை, இரட்டை சுடுகாடு, சலூன் கடைகளில் தலித் மக்களுக்கு முடிவெட்ட அனுமதி மறுப்பு என பல்வேறு வடிவங்களில் உள்ள தீண்டாமை கொடுமைகளை கண்டறிந்து கோவை மாவட்டத்தில் எடுக்கப்பட்ட முதற்கட்ட பட்டியலை சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்கள், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் கூறுகையில், சமூக நீதி மாநிலமான தமிழ்நாட்டில், இன்னும் பல கிராமங்களில் குறிப்பாக கோவையில் பல கிராமங்களில் இரட்டை டம்ளர் முறை, தலித் மக்களுக்கு தனிச் சுடுகாடு உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகள் இருப்பதாக கூறி, கோவை மாவட்டத்தில் உள்ள தீண்டாமை கொடுமைகள் குறித்து பட்டியலிட்டார். இத்தகைய தீண்டாமை கொடுமைகள் தொடர்வதை அனுமதிக்க முடியாது என்றும் அரசும் அனுமதிக்கக் கூடாது என்றும் கூறினார். இதன் மீது தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ‌மேலும், நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமையின் வழிகாட்டுதலின்படி போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe