சோமையனூர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர்.

published 1 day ago

சோமையனூர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர்.

கோவை: கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், சோமையனூர், திருவள்ளுவர் நகர், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது.

இன்று அதிகாலை சுமார் 5:30 மணியளவில் சோமையனூர் பகுதியை சேர்ந்த லட்சுமி(62) மற்றும் சின்னதங்காள்(55) ஆகிய இருவர் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு காட்டு யானைகள் லட்சுமியை தும்பிக்கையால் தள்ளிவிட்டுள்ளது. அதில் அவர் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்ததில் இடுப்பில் உள் காயம் ஏற்பட்டது. சின்னதங்காள் யானையைப் பார்த்து பயந்து ஓட முயற்சித்ததில் கீழே விழுந்து கால் கை முகம் ஆகிய பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இருவரும் அலறிய சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருவரும் வீடு திரும்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe