கோவையில் நடைபெற்ற சாண்டா மாரத்தான்- ஆர்வத்துடன் பங்கேற்ற குழந்தைகள்...

published 10 hours ago

கோவையில் நடைபெற்ற சாண்டா மாரத்தான்- ஆர்வத்துடன் பங்கேற்ற குழந்தைகள்...

கோவை: கோவையில் பலூன் ரன் 24 என்ற தலைப்பில் சிறுவர் சிறுமியருக்கான சாண்டா மராத்தான் போட்டி நடைபெற்ற நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் பங்கேற்று ஜூம்பா நடனமாடி பின்னர் ஓட்டத்தில் பங்கேற்றனர்.

கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோசோன் நிறுவனம் சார்பில் சிறுவர் சிறுமிகளுக்கான சாண்டா பலூன் மரத்தான் ஓட்டம் நடைபெற்றது.பலூன் ரன் 24 என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மராத்தன் ஓட்டத்தில் சுமார் 1500 குழந்தைகள் பங்கேற்றனர். 

முன்னதாக குழந்தைகள் மற்றும் பெற்றோரை உற்சாகப்படுத்தும் விதமாக ஜும்பா நடனம் நிகழ்ச்சியும் நடத்தப்பட்ட நிலையில் சிறுவர் சிறுமிகள் ஆர்வமுடன் நடனமாடி குதூகலம் அடைந்தனர்.தொடர்ந்து  4 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கான ஓட்டத்தில் இரண்டு பிரிவுகளாக குழந்தைகள் ஓட வைக்கப்பட்டனர்.
 

குழந்தைகளுடன் சேர்ந்து அவர்களின் பெற்றோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.தொடர்ந்து மராத்தானில் பங்கேற்ற அனைத்து குழந்தைக்கு மெடல்கள் வழங்கப்பட்டது.மேலும் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு 1.5 லட்சம் மதிப்புள்ள பரிசுகளும் வழங்கப்பட்டன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe