இன்று முதல் கோவை-மேட்டுப்பாளையம் இடையே கூடுதலாக 2 மெமு ரயில்கள் இயக்கம்

published 2 years ago

இன்று முதல் கோவை-மேட்டுப்பாளையம் இடையே கூடுதலாக 2 மெமு ரயில்கள் இயக்கம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை, ஜூன்.20- கோவை-மேட்டுப்பாளையம் இடையே தற்போது 3 முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கூடுதலாக 2 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Sponsored

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை-மேட்டுப்பாளையம் இடையே முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06814), கோவையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு, நண்பகல் 12.35 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

மேட்டுப்பாளையம்-கோவை இடையிலான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06815), மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்கு புறப்பட்டு 1.50 மணிக்கு கோவை வந்தடையும்.

இதேபோன்று இரவு கோவை-மேட்டுப்பாளையம் இடையே முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06822), கோவையில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு, 9.10 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

மேட்டுப்பாளையம்-கோவையிலான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (05823), மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ரயில்கள் அனைத்தும் இன்று (20-ந் தேதி) முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும்.

இந்த ரயில்கள், கோவை வடக்கு, துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், காரமடை ரயில் நிலையங்களில் தலா ஒரு நிமிடம் நின்று செல்லும். கோவை-மேட்டுப்பாளையம் இடையே எந்த ரயில் நிலையத்தில் ஏறி இறங்கினாலும், இந்த ரயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும்.

எனவே, தினசரி இந்த வழித்தடத்தில் பயணிப்போர் ரூ.185 செலுத்தி மாதாந்திர சீசன் டிக்கெட் பெற்றுக் கொண்டு, கோவை-மேட்டுப்பாளையம் இடையே பயணிக்கலாம். இதுதவிர, 3 மாதங்களுக்கு சேர்த்து ரூ.500 செலுத்தி சீசன் டிக்கெட் பெற்றும் பயணிக்கலாம். சீசன் டிக்கெட் விண்ணப்பத்துடன் ஒரு புகைப்படம், ஆதார் அட்டை நகலை அளித்தால் போதுமானது. அவர்களுக்கு அடையாள அட்டையுடன் சீசன் டிக்கெட் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Sponsored

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe