நம்ம கோவை மாநகராட்சி பள்ளிக்கு தான் இந்தாண்டு சுழற்கோப்பை..!

published 1 year ago

நம்ம கோவை மாநகராட்சி பள்ளிக்கு தான் இந்தாண்டு சுழற்கோப்பை..!

கோவை: மாநில அளவிலான சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் சுழற்கோப்பையை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி பெற்று அசத்தியுள்ளது.

தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் மாநில அளவிலான சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கோப்பை வழங்கை கவுரவப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் 2022-2023 கல்வி ஆண்டுக்கு மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டுள்ளது .

சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் இருந்து கோயம்புத்தூர் மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் ரமேஷ் பாபு, பள்ளி தலைமை ஆசிரியை மைதிலி, கணிதப் பட்டதாரி ஆசிரியை சுகுணா ஆகியோர் இந்த சுழற்கோப்பையை பெற்றனர்.

கோவையில் பல்வேறு மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் மசக்காளிபாளையம் பள்ளியில் ஆசிரியர்கள் தாமாக முன்வந்து மாணவர்களுக்கு பல்வேறு திறன் வளர்ப்பு பாடத்திட்டங்களை வழங்கினர்.  மேலும், தன்னார்வலர்கள் பல உதவிகளையும் பள்ளிக்கும், மாணவர்களுக்கும் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு எம்.எல்.ஏ ஒருவரின் சிபாரிசு கடிதத்துடன் வந்த பெற்றோரையும் காண முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe