சூலூரில் உள்ள கல்லூரியில் ராக்கிங்- 3 பேர் மீது வழக்குப்பதிவு...

published 1 year ago

சூலூரில் உள்ள கல்லூரியில் ராக்கிங்- 3 பேர் மீது வழக்குப்பதிவு...

கோவை: சூலூரில் கல்லூரி மாணவனை ராக்கிங் செய்ததாக சக கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ம்

கோவை மாவட்டம்  சூலூரில் தனியார் (ஆர்.வி.எஸ்) இன்ஜினியரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்திலேயே டீச்சர் ட்ரெயினிங் உட்பட  ஆர்.வி.எஸ் கல்வி நிறுவனத்தின் பல்வேறு கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் சேலத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் அகிலேஷ் நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். கல்லூரியில் செல்லும்போது அனைத்து மாணவர்களை போல இவர் அணிந்திருந்த சட்டை டக்கின் செய்து சென்றுள்ளார். கல்லூரி வேலை நேரம் முடிந்தது வகுப்பறை விட்டு வெளியே வந்தவர் சட்டையை டக்அவுட் எடுத்துள்ளார். 

இதை கவனித்த நான்காம் ஆண்டு மாணவர்கள் கோகுல் மற்றும் முத்துக்குமார், அகிலேஷை அழைத்து வம்பு இழுத்ததாக கூறப்படுகிறது. மேலும் வீட்டுக்கு செல்லும் வரை டக்கின் செய்து கொண்டுதான் செல்ல வேண்டும், சீனியர் மாணவர்களை பார்த்தல் வணக்கம் வைக்க வேண்டும் எனக் கூறி அவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அகிலேஷ் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளார்.  இந்த நிலையில் சீனியர்  மாணவர்கள் முத்துக்குமார் மற்றும் கோகுல் ஆகியோர் தங்கள் நண்பர் ஒருவருடன் வந்து அகிலேசை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து அவர்களது அறைக்கு அழைத்துச் சென்றனர்‌. அங்கு ஏன் கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்தால் என கேட்டு அகிலேஷை  துன்புறுத்தியதுடன் இனிமேல் இவ்வாறு செய்ய மாட்டேன் என அகிலேசை உறுதி ஏற்க செய்ததாக கூறப்படுகிறது. 

அகிலேஷ் வெளியே வந்ததும் சீனியர் மாணவர்கள் தன்னை தாக்கியது குறித்து தந்தைக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சேலத்தில் இருந்து அகிலேஷ் தந்தை நேற்று இரவு சூலூர் வந்ததும் மாணவன் அகிலேஷ் அழைத்துக்கொண்டு சூலூர் காவல் நிலையத்தில் தனது மகன் தாக்கப்பட்டது தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் பேரில் வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசார் நான்காம் ஆண்டு கல்லூரி மாணவர்கள் கோகுல் மற்றும் முத்துக்குமார் மற்றும் மாணவர்களுக்கு உதவிய ஆவின் டீக்கடை ஊழியர் உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe