விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை - மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை..!

published 1 year ago

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை - மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை..!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விஜயகாந்த் உடல்நலம் குறித்த அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

திரு.விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. 

அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம் அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது.

இவ்வாறு மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe