கோவை லாட்ஜில் ஜில் ஜில் மசாஜ்…! 8 லட்சம் ஆட்டய போட்ட கும்பல்…! ஆபாச வெப்சைடால் வந்த வினை..!

published 1 year ago

கோவை லாட்ஜில் ஜில் ஜில் மசாஜ்…! 8 லட்சம் ஆட்டய போட்ட கும்பல்…! ஆபாச வெப்சைடால் வந்த வினை..!

கோவை: உடையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் அந்த 21 வயதே  நிரம்பிய கல்லூரி மாணவர்.. இவர் சில மாதங்களுக்கு முன்பு, சைபர் கிரைம் போலீசில் புகார்அளித்திருந்தார்.

அதில் தனக்கு அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், இணையத்தில் தேடினேன். அதில் சில அழகான பெண்களின் கவர்ச்சி படத்துடன் ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்தால், முழு இரவு அழகான இளம்பெண்ணுடன் ஸ்டார் லாட்ஜில் ஜாலியாக இருக்கலாம் என்று விளம்பரத்தை பார்தேன்.

அதில் உள்ள போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, ஒரு நபர் தன்னை, குமார் என்று அறிமுகம் செய்து கொண்டு, பீளமேட்டில் உள்ள ஸ்டார் ஓட்டலில் அழகான பெண்கள் இருப்பதாகவும், அங்கு உல்லாசமாகவும் இருக்கலாம் என்று சொல்லி சில பெண்களின் ஆபாச போட்டோக்களை அனுப்பினார்.

அதில் எனக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்து அந்த பெண்ணுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என்று சொல்லவும், முன்பணமாக உடனடியாக ரூ.2,500 அனுப்ப வேண்டும் என்றார்.. பணத்தை நான் கட்டியதும், "ஸ்டார் ஓட்டலில் உங்களுக்காக இளம்பெண் காத்து கொண்டிருக்கிறார் என்றார். அந்த ஓட்டலுக்கு சென்ற நான், பெண் எந்த ரூமில் இருக்கிறார், அந்த ரூம் நம்பர் என்ன? என்று ஹோட்டல் ரிசப்ஷனிலிருந்து கேட்டேன்..

அதற்கு அவர், அந்தப் பெண்ணின் பாதுகாப்பிற்காகவும், ரூம் வாடகை, போலீசுக்கு தரவேண்டியது என்று கேட்டு சுமார் ரூ.7 லட்சத்து 84 ஆயிரம் பணத்தை பெற்று கொண்டு தன்னை ஏமாற்றி விட்டார். 

இப்போதும், கோவையை சேர்ந்தவர் இந்த 43 வயது நபர் உல்லாச ஆயுர்வேத மசாஜ் பெற ஆசைப்பட்டுள்ளார்.. இதற்கு இவர் இழந்த ரொக்கம் மொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாகும். 

மசாஜ்: "லொக்காண்டா" என்ற ஆப்பில் வரும் தகவல், விவரங்களை கேட்பவர்களை குறிவைத்து, பண மோசடியை செய்து வருகிறதாம்..

சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த கும்பல் போனை போட்டு, "மசாஜ், கால் கேர்ஸ் என்று பல்வேறு தேவைகளுக்கு, உங்கள் பகுதியில் உள்ள ஓட்டல், ரிசார்ட் என தேவையான இடங்களுக்கு பெண்கள் வருவார்கள்" என்று கவர்ச்சியாக பேசுகிறார்களாம்.. 

போலீசாரும், இவர்களின் புகாரின்பேரில் மோசடியில் ஈடுபட்ட ஹரிபிரசாத், மகேந்திரன், சக்திவேல்,, சரவணமூர்த்தி, அருண்குமார், சக்திவேல், ஜெயபாரதி, மகேந்திரன், கோகுல், போன்றோரை பெங்களூருவில் வைத்து கைது செய்திருக்கிறார்கள்.. இவர்கள் கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள்.. இவர்கள் எல்லாருமே பெரும்பாலும் 30 வயதுக்கு கீழுள்ளவர்கள்தான்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், வேறு ஒரு கும்பலை பற்றின அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மோசடி கும்பல், மும்பை, பெங்களூர், கோவா பகுதியில் தங்கி மோசடியில் ஈடுபடுவார்களாம்..

இதற்காகவே, புதுசு புதுசுகா சிம்கார்டுகள் வாங்கி வைத்திருக்கிறார்கள்.. புது பேங்க் அக்கவுண்ட்களையும் வைத்திருக்கிறார்கள். துபாய்க்கு போனால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று பணத்தாசை காட்டி இளம்பெண்களுக்கு வலையை விரித்துள்ளனர்.. இப்படித்தான், சில சினிமா நடன கலைஞர்களை துபாய்க்கு அனுப்பியிருக்கிறார்கள்.. துபாய் சென்ற இளம்பெண்களை அங்குள்ள கிளப்களில் டான்ஸ் ஆடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். கிளப் டான்ஸ்: ஆனால், அந்த கிளப்பில் டான்ஸ் ஆடுவது, பெண்களுக்கு பிடிக்காததால், திருப்பூரில் உள்ள தங்களுடைய பெற்றோர்களிடம் சொல்லி அழுதுள்ளனர்.. இதைக்கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்கள், திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்கள்.. 

இந்த புகாரின் பேரில்4 பேரை கைது செய்து, துபாயில் சிக்கி கொண்டிருக்கும் இளம்பெண்களையும் மீட்டுள்ளனர். இந்த பெண்களை எல்லாம், துபாய்க்கு அனுப்பி வைத்தது, 19 வயதுடைய பெண்.. அதுவும் சினிமா நடனக்கலைஞராம்..!!! அலர்ட்: சமீபகாலமாகவே, ஆன்லைன் மோசடிகள் பெருகி வருவதுடன், இதை வைத்து பணம் பறிப்பதும் அதிகமாகி வருகிறது.. வரன்கள் முதல் வேலைவாய்ப்புகள், பெண்களுடன் ஜாலியாக இருப்பது வரை அனைத்துக்கும் தனித்தனி வெப்சைட்கள் இயங்கி வருகின்றன. 

அதனால்தான், சைபர் கிரைம் போலீசாரும் இது குறித்து பொதுமக்களுக்கு எந்நேரமும் அட்வைஸ் தந்து வருகிறார்கள்.. அதையும் மீறி, கவர்ச்சி விளம்பரங்களில் சிலர் விழுந்து, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருவது கவலையை தந்து வருகிறது..!!


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe